அதிவேகமாக பயணித்தாகக் கூறப்படும் வேனொன்று , தனியார் பேருந்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் வேனில் பயணித்த குழந்தையொன்று காயமடைந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரிக்கு அருகாமையில் நேற்று மாலை 6 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் வேனின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்துள்ளது. விபத்து தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.
