ஹட்டன் டிக்கோயா நகர சபை தேசிய மக்கள் சக்தி வசம்

ஹட்டன் டிக்கோயா நகர சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 26.06.2025 அன்று மதியம் 03 மணியளவில் ஹட்டன் டிக்கோயா நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுரேந்திர ஆராச்சிகே அசோக கருணாரத்ன, திறந்த வாக்கெடுப்பு மூலம் நகர சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் பெருமாள் சுரேந்திரன் சபையின் உப தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஹட்டன் டிக்கோயா நகர சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி சார்பாக சுரேந்திர ஆராச்சிகே அசோக கருணாரத்ன, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக அழகமுத்து நந்தகுமார் ஆகியோர் தலைவருக்காக போட்டியிட்டனர்.

இதில் திறந்த வாக்கெடுப்பிற்கு 08 வாக்குகள் கிடைக்கப்பெற்றதால், திறந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் 08 வாக்குகளை பெற்று சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுரேந்திர ஆராச்சிகே அசோக கருணாரத்ன தெரிவு செய்யப்பட்டார்.

எதிராக போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக அழகமுத்து நந்தகுமார் 07 வாக்குகளே பெற்றுக்கொண்டார்.

இதே இந்த சபைக்கு உப தலைவர் தெரிவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக பெருமாள் சுரேந்திரன் பெயர் முன்மொழியப்பட்டது. அதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக செல்லையா யோகேஸ்வரம் பெயர் முன்மொழியப்பட்டது. இதன்போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக பெருமாள் சுரேந்திரன் 08 வாக்குகளை பெற்று சபையின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார். ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக செல்லையா யோகேஸ்வரம் 07 வாக்குகளே பெற்றுக்கொண்டார்.

 

. ஹட்டன் டிக்கோயா நகரசபை (15 உறுப்பினர்கள்)

• தேசிய மக்கள் சக்தி – 06

• ஐக்கிய மக்கள் சக்தி – 05

• இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 02

• சுயேட்சை குழு (01) – 01

• ஐக்கிய தேசியக் கட்சி – 01

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles