ஹட்டன் நகரிலுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை – குருவியின் செய்திக்கு கைமேல் பலன்

ஹட்டன் நகரில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

” ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைய  ஹட்டன் நகரத்தில் குவிந்துள்ள கழிவுகளை தற்காலிகமாக மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட ரிக்காடன் கழிவு அகற்றப்படும் பிரதேசத்திற்கு கொண்டுச்செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.”  என்று ஹட்டன் – டிக்கோயா நகரசபை தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் – டிக்கோயா  நகர சபைக்குட்பட்ட பிரதான நகரமான ஹட்டன் நகரத்தில் திண்ம கழிவுகளை பிரித்து அகற்றுவதில்  கடந்த சில தினங்களாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன.

இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில்  ஹட்டன் நகரின் மத்தியில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளை தற்காலிகமாக  உடன் அகற்றுவதற்றகான நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் மேற்கொண்டுள்ளார்.

அத்தோடு ஹட்டன் நகர குப்பைகளை  அகற்ற பிறிதொரு இடம் வெகுவிரைவில் அடையாளம் காணப்பட்டு நகரசபைக்கு வழங்கப்படவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.

ஹட்டன் நகரில் குப்பைகள் குவிந்து கிடப்பது தொடர்பான செய்தியை ‘மலையக குருவி’ நேற்று பதிவிட்டிருந்தது. எமது செய்தியாளர் மஸ்கெலியா, பெருமாள் அது தொடர்பான தகவல்களை அனுப்பி வைத்திருந்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles