ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியிலிருந்து சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்பதற்கு தகுதிபெற்றுள்ளனர் என்று கல்லூரியின் அதிபர் ஆர். ஸ்ரீதர் தெரிவித்தார்.
தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலம் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இருந்தே இந்த பெறுபேறு கிடைக்கப்பெற்றுள்ளது. அதாவது பரீட்சைக்கு தோற்றிய மொத்த மாணவர்களில் 96 வீதமானோர் சித்தியடைந்துள்ளனர்.
குறிப்பாக ஆங்கில மொழிமூலம் பரீட்சைக்கு தோற்றிய 44 மாணவர்களுள் 6 பேர் 9 ஏ சித்தியை பெற்றுள்ளனர். தமிழ் மொழிமூலம் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 14 பேர் 9 ஏ சித்தியை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது. அழகியற் பாடத்துக்கான பெறுபேறு வெளியானதும் இதனை அறியமுடியும் எனவும் கல்லூரி அதிபர் குறிப்பிட்டார்.
அதேவேளை, கணிதப்பாடத்தில் 104 மாணவர்கள் அதிசிறந்த சித்தியினை பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். 55 வீதமான மாணவர்கள் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
க.கிஷாந்தன், கே. சுந்தரலிங்கம்