ஹப்புத்தளை , தங்கமலை பகுதியில் இன்று காலை லொறி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த லொறி குருணாகலை பகுதியில் இருந்து நுவரெலியா – வெலிமடை ஹப்புத்தளை ஊடாக கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருக்கையில், ஹப்புத்தளை தங்கமலை பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான லொறியில் சாரதியும் உதவியாளரும் மாத்திரமே இருந்ததாகவும் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.ராமு தனராஜ்