ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் கொலை: ஜனாதிபதி கடும் கண்டனம்!

ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் படுகொலையை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது எனவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் இன்று (31) நடைபெற்ற சந்திப்பில் ஜனரிபதி இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன், புதிய நோக்குடனும் புதிய வேலைத் திட்டத்துடனும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவே தான் சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாகவும் மாகாண சபைகள், மத்திய அரசாங்கம் உட்பட 10 நிர்வாகக் கட்டமைப்பின் ஊடாக நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் செல்வதற்கு அர்ப்பணிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Related Articles

Latest Articles