ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் ஹிஸ்மாயில் ஹனியே இஸ்ரேலின் தாக்குதலில்தான் கொல்லப்பட்டார் என்பதை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
ஈரானில் வைத்து கடந்த ஜுலை மாதம் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் கொல்லப்பட்டிருந்தார். இஸ்ரேல்தான் இதன் பின்னிணியில் உள்ளது என ஈரான் குற்றஞ்சாட்டி இருந்தது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல்மீது தாக்குதலும் நடத்தி இருந்தது.
எனினும், இது தொடர்பில் இஸ்ரேல் மௌனம் காத்துவந்த நிலையிலேயே தற்போது மௌனத்தை கலைத்து, தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகின்றது.