சீரற்ற காலநிலையால் நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக ஹாலிஎல பகுதியில் வீடொன்றில் மீது மண்மேடு சரிந்த விழுந்ததில் 9 சிறுமி ஒருவர் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
ரொசட் தோட்டம், கிரவனாகொட, உடுவர, ஹாலிஎல பகுதியில் உள்ள வீடொன்றில் மீது இவ்வாறு மண்மேடு சரிந்து விழுந்ததில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
காயமடைந்த 9 வயதுடைய சிறுமி பதுளை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சில தினங்களாக நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக ஆங்காங்கே சிறு சிறு மண்சரிவுகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
ராமு தனராஜா