பலாங்கொடை, பெட்டிகல தோட்டத்தைச் சேர்ந்த தந்தையொருவர், தனது நான்கு வயது மகளைக் கொடூரமாகத் தாக்கி , வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் மனைவி ஒன்பது மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டுக்குச் சென்றிருந்த நிலையில், சிறுமியைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு மேற்படி நபரிடமும் பெற்றோரிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தனது மனைவியை மிரட்டி பணம் வாங்கும் நோக்கில், மகளை கொடூரமாக தாக்கி, அதனை வீடியோ எடுத்து, வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான சிறுமி பலாங்கொட ஆரம்ப வைத்தியசாலை யில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
கைது செய்யப்பட்ட தந்தையை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
