நாட்டில் கையிருப்பிலுள்ள பைசர்(Pfizer) தடுப்பூசிகளை மேலும் 06 வார காலத்திற்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, நான்காவது கொவிட் தடுப்பூசியை பொதுமக்கள் மிக விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் என COVID 19 ஒழிப்பு தொடர்பான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் 15 வீதமான மக்கள் மாத்திரமே நான்காவது COVID 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது 07 இலட்சம் Pfizer தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக COVID 19 ஒழிப்பு தொடர்பான இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி கூறியுள்ளார்.










