100 சிறார்களை பலியெடுத்த திரவ மருந்து நாட்டில் இல்லை!

இந்தோனேஷியா மற்றும் கம்பியா ஆகிய நாடுகளில் நூற்றுக்கும் அதிகமான சிறார்களின் உயிரைக் காவு கொண்ட பாணி மற்றும் திரவ மருந்துகள் இலங்கையில் பயன்பாட்டில் இல்லையென தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒளடதங்களை பதிவு செய்யும்போது, மருந்து கட்டுப்பாடு அதிகார சபையினால் அமுல்படுத்தப்படும் கடும் சட்டங்களுக்கு மத்தியில் தரம் கூடிய மருந்துகள் மாத்திரமே நாட்டுக்குள் இறக்குமதி செய்ய அனுமதி கிடைக்குமென அந்த சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இருமலுக்கு பயன்படுத்தப்பட்ட பாணி மருந்து காரணமாக, கம்பியாவில் 70 சிறார்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, பாணி மற்றும் திரவ மருந்துகளை அருந்திய இந்தோனேஷியாவைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான சிறார்களும் உயிரிழந்தனர். சில, திரவ மருந்துகளில் சிறுநீரகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற இராசயனப் பொருள் அடங்கியிருந்தமை இந்தோனேஷிய அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles