1000 ரூபா வழங்க கம்பனிகள் மறுப்பு! கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலக தொழிற்சங்கங்கள் முடிவு!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு கம்பனிகள் பச்சைக்கொடி காட்டாவிட்டால், கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கு அதில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்கங்களும் கொள்கை ரீதியில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட கூட்டமைப்பு ஆகியனவே இந்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

தொழில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தொழிற்சங்க மற்றும் கம்பனிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். எனினும், நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு கம்பனிகள் மறுப்பு தெரிவித்துவிட்டன.

இதனையடுத்தே ஆயிரம் ரூபா இல்லாவிட்டால் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கு பிரதான மூன்று தொழிற்சங்கங்களும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles