மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பளம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை (11) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது என ஆளுங்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
தொழில் அமைச்சர் தலைமையில் தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுகள் தோல்வியடைந்துள்ள நிலையிலேயே இது விடயம் குறித்து அமைச்சரவையில் ஆராயப்படவுள்ளது.
இது தொடர்பில் தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தவுள்ளதுடன், மாற்று யோசனையையும் முன்வைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்க மறுக்கும் நிறுவனங்களின் முகாமைத்துவம் மீள் பரீசிலனை செய்யப்படும் என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.










