யாழ்ப்பாணத்தில் டிப்பர், மோட்டார் சைக்கிள் என்பன மோதி இடம்பெற்ற விபத்தில் தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.
தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியான கோண்டாவிலைச் சேர்ந்த கணபதிப் பிள்ளை ஈஸ்வரன் (வயது – 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்படி கல்வி அதிகாரி பாடசாலை ஒன்றில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்காக நேற்று கோப்பாய் – கைதடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவேளை எதிரே வந்த டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.










