நாட்டில் 105 பொலிஸாருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அத்துடன், 300 பேர்வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் – என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ஹோரண தெரிவித்தார்.
பேலியகொடை கொத்தணிமூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
கடமையில் இருக்கும் பொலிஸாருக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள், அங்கிககள் வழங்கப்பட்டிருந்தன. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் பொலிஸார் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை. எனினும், பேலியகொடை மீன் சந்தை உள்ளிட்ட இடங்களுக்கு சென்றவர்கள் மூலமே வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது.