சர்வஜன அதிகாரம் எனும் அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபரும், மவ்பிம ஜனதா கட்சியின் தலைவருமான திலித் ஜயவீர பெயரிடப்பட்டுள்ளார்.
“ஒன்றிணைந்து எழுந்திடும் தேசம் – மகிழ்ச்சிமிகு தேசம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்று வரும் சர்வஜன அதிகாரத்தின் கூட்டத்தின்போதே மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல்வீரவன்ச, உதயகம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்கள் மேற்படி கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
