1,105 ரூபாவே இறுதி யோசனை : ஏற்க மறுத்தால் கூட்டு ஒப்பந்தம் இரத்தாகும் : ஜனாதிபதி மீது நம்பிக்கை உள்ளது என கம்பனிகள் அறிக்கை

படம் : யுவராஜன் (நுவரெலியா)

பெருந்தோட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ரூ.1,105 ஐ வழங்கும்
இறுதி யோசனையை இலங்கை பெருந்N;தாட்ட கம்;பனிகள் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் பெருந்தோட்ட சேவைகள் பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமது திட்டங்களில் உள்ள பெறுமதியை ஜனாதிபதி காண்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தாம் முன்வைத்த அனைத்துத் திட்டங்களையும் தொழிற்சங்கங்கள் நிராகரித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், எந்தவொரு சிறந்த சாத்தியமான மாற்றுத் திட்டத்தையும் தொழிற்சங்கள் சமர்ப்பிக்க தவறிவிட்டதாகவும்

அத்துடன், தமது இறுதித் தீர்மானத்தை தொழிற்கங்கள் ஏற்க மறுத்தால் அது கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய வழிவகுக்கும் என்றும் அவ்வாறு நடந்தால் சம்பள சபையை நாட வேண்டி ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பள விவகாரம் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் பெருந்தோட்ட சேவைகள் பிரிவின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ,

தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ரூ.1,105 ஐ வழங்கும்
இறுதி யோசனையை சமர்ப்பித்துள்ள இலங்கை பெருந்N;தாட்ட கம்;பனிகள்

• ஒவ்வொரு தோட்டத் தொழிலாளருக்கும் நிலையான எதிர்காலத்தை வழங்கும் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
• புதிய திட்டமானது தொழிலாளரின் நாளாந்த வருமானம் ஆயிரம் ரூபாவை தாண்டுவதை உறுதி செய்கிறது
• ஒட்டுமொத்த தோட்டத்துறையினதும் நிதி ஸ்திரத்தன்மைக்கு அனைத்து பங்குதாரர்களும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் (ஆர்.பி.சி) தலைவர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில் பெருந்தோட்ட துறைக்கான நிலையான வருமானத்திற்கான வரைவு மாதிரியை உறுதி செய்வதற்கான இறுதி முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தோட்டத் தொழிலாளர்களின் தொழில் மற்றும் வாழ்வாதாரத்தின் நிலையான தன்மையை உறுதிப்படுத்துகின்றது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் பெருந்தோட்ட சேவைகள் பிரிவின் தலைவர், “அமைச்சருடான சந்திப்பு மிக பயனுள்ளதாக அமைந்தது. எமது தொழிலாளர்களுக்கு மிக உயர்ந்த வருமானத்தை பெறக்கூடிய திறனை வழங்கும். அத்துடன் எமது இந்த வரைவு மாதிரிக்கு அமைய வருமானத்தில் 30மூ அதிகரிப்புக்கு உதவலாம். அத்துடன் உற்பத்தித்திறன் அடிப்படையிலான முறைமையின் கீழ் தொழிலாளர்கள் அதிக வருமானத்தை சம்பாதிக்க முடியும். இது எமது முழுத் தொழிலையும் நவீனமயமாக்குவதற்கான முதல் படியாகும், மேலும் காலனித்துவ சகாப்தத்தின் நினைவுச்சின்னமாகவும், புதுப்பித்தலுக்கான நீண்ட கால தாமதமாகவும் இருக்கும் ஒரு அடிப்படை நாளாந்த சம்பள முறையை தாண்டிய ஒரு நடவடிக்கையாகவே உள்ளது”

“நாங்கள் தொழிற்சங்கங்களின் வேண்டுகோளாக இருந்த ஆயிரம் ரூபா சம்பளத்தை தாண்டிச் சென்;றுள்ளோம். இது முன்பிருந்த ஒப்பந்தத்தில் இருந்ததைவிட 40மூ அதிகரிப்பாகும். ஆடை மற்றும் சுற்றுலா துறையின் சம்பளங்கள் குறைக்கப்பட்டு தொழிலாளர்கள் தொழில்களை இழக்கும் தருணத்தில், எமது ஊழியர்களை தொற்றுநோய்களின் எதிர்மறையான தாக்கங்களிலிருந்து பாதுகாத்து, சம்பள உயர்வை அதிகரிக்க எடுத்த தீர்மானம் முக்கியமாகும். இது எளிதான விடயமல்ல. இது இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் தமது வருமானத்தை நிலையாக வைத்திருப்பதற்கு கடினமான நிலைமையாகும். எமது நிலை தொடர்பாக அரசாங்கத்திற்;கு தெளிவுபடுத்தியுள்ளதுடன், அதன்படி சரியான முடிவை எடுக்க வேண்டிய தேவை தற்போது தொழிற்சங்கங்களிடமே உள்ள ” என அவர் தெரிவித்தார்.

இந்த புதிய நிதி திட்ட வரைவுக்கமைய இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் நாளாந்தம் நிலையான சம்பளமாக ரூ.1,105ஐ நிர்ணயித்துள்ளன. அத்துடன் நாளாந்த வருகை மற்றும் உற்பத்தித்திறன் ஊக்கங்களை மீள அறிமுகப்படுத்தியுள்ளன. இவற்றை தொழிற்சங்கங்கள் முன்னர் எதிர்த்தபோதும் சமீப காலமாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் விளைவாக தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் மாற்றியுள்ளன.

நாளாந்த சம்பள பிரிவுகள் இவ்வாறு அமைகின்றது. அடிப்படை சம்பளம் – ரூ. 700, ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி (நுPகுஃநுவுகு) – ரூ. 105, வருகை ஊக்குவிப்புத் தொகை – ரூ. 150 மற்றும் உற்பத்தித்திறன் ஊக்குவிப்புத் தொகை – ரூ. 150. புதிய திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் ரூ.6,250 அதிகரிக்கப்பட்ட தொகை கிடைக்கும்.

திருத்தப்பட்ட நாட் சம்பள மாதிரிக்கு மேலதிகமாக, தொழிலாளர்களுக்கு இறுதியாக பயனுள்ள ஊக்கத்தொகைகள் வழங்கப்படுவதையும் அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலம் வெகுமதி பெறுவதையும் உறுதி செய்வதற்காக உற்பத்தித்திறன் – இணைக்கப்பட்ட வருமானம் ஈட்டும் முறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் பரிந்துரைத்துள்ளன.

முன்மொழியப்பட்ட நிலையான நாளாந்த சம்பள மாதிரி வாரத்தில் 3 நாட்கள் செயல்படுத்தப்படும், ஏனைய நாட்களில் அவை இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் முன்வைக்கும் தனித் திறன் சார்ந்த இரண்டில் ஒன்றை அடைவதன் ஊடாக தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமான ரூ.1,105 ஐ விட அதிகம் வருமானத்தை அடையலாம்.

உற்பத்தித்திறன் – இணைக்கப்பட்ட கூறுகளின் கீழ், ஊழியர்கள் பறித்த ஒவ்வொரு கிலோ தேயிலைக்கும் ரூ. 50 (நுPகுஃநுவுகு உட்பட) தொகையையும் இறப்பரை பொறுத்தமட்டில் ஒரு கிலோ இறப்பருக்கு ரூ. 125 ( நுPகுஃநுவுகு உட்பட) வழங்கப்படுகின்றது.

மாற்றுத் திட்டமாக இலங்கையில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர் துறையில் வெற்றியுடன் நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளதைப் போலவே, அதிக வருமானத்தை வழங்கும், வருமான பகிரக்கூடிய மாதிரியின் அடிப்படையில் ஊழியர்கள் ஊதியம் பெறுவார்கள். இந்த இரண்டு மாதிரிகளையும் தொடர விரும்பாத நிறுவனங்கள், நிலையான நாளாந்த சம்பள முறையைத் தொடர உரிமையை (தங்கள் விருப்பப்படி) வழங்கும்.

தற்போது, தேயிலை உற்பத்தி செலவு ஒரு நாளைக்கு 615 ரூபாய், அது உலகில் தேயிலை உற்பத்தி செய்யும் எந்தவொரு நாட்டுடன் ஒப்பிடும் போது இது அதிகமாகும். அதன்படி ஒட்டுமொத்த உற்பத்திக்காக ஏற்படும் தொழிலாளர்களின் மொத்த உற்பத்தி செலவில் 63மூ ஆகும். நாளாந்த வருமானம் ரூ. 1,105. நாளாந்த உற்பத்தி செலவு இனி ரூ.730 ஆகும். துரதிர்ஷ்டவசமாக, அதிக உற்பத்தி செலவு இருந்த போதிலும், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் நிலையான விலையை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது இந்தத் துறையின் பொருளாதார நம்பகத்தன்மையை மேலும் குறைத்துவிடும்.

ஆரம்பத்தில் ஆர்.பி.சி தேயிலை ஏல விலை என்றுமில்லாத வகையில் ரூ. 2017 இல் சராசரியாக கிலோவுக்கு ரூ.601 (அமெரிக்க டொலர் 3.99) மற்றும் அதன் பின்னர் கிலோவுக்க ரூ. 581 ஆகும் (அமெரிக்க டொலர் 3.16). இருப்பினும், இலங்கையின் தேயிலைக்கு உலகளாவிய சந்தையில் விலை அதிகரித்ததால் விலை போட்டியற்றதாகிவிட்டது, குறிப்பாக கென்யாவில் நடந்த மொம்பாசா ஏலத்தில் தேயிலைக்கு 1.94 அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில். கென்யா போன்ற போட்டியாளர்கள் பயிர் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை வெளிப்படுத்தி உலகளாவிய ரீதியில் 50மூ வரையான சந்தை விநியோகத்திற்கு வழிவகுத்தது. இது இலங்கை தேயிலையை சர்வதேச சந்தையில் குறைப்பதற்கு கட்டாயத்திற்கு உள்ளானது.

“உலகளவில் மற்றும் உள்நாட்டில் ஏற்பட்ட சாதகமற்ற சந்தை நிலைமைகளால் தேயிலைத் தொழில் வீழ்ச்சியடைந்திருந்தது. கொவிட்-19 காரணமாக மோசமான பொருளாதார நிலைமைகள், உலகளாவிய நாடுகளுக்கு இடையிலான முடக்கல்கள் மற்றும் போக்குவரத்து விரைவாக வீழ்ச்சியடைந்ததால் சிக்கல்கள் ஏற்பட்டன. இது தொழில்துறையின் நீடித்த தன்மையையும், இலங்கை தேயிலை வர்த்தகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளன. இருப்பினும் இன்னுமொரு சாத்தியமான, நிலையான வழி உள்ளது, ஆனால் அதனை தொடர, அனைத்து பங்குதாரர்களும் இந்த அடிப்படைகளை புரிந்து கொள்ள வேண்டும்: நாம் சம்பாதிப்பதை விட அதிகமாக சம்பளம் செலுத்த முடியாது. உலகளாவிய சந்தை செயற்பாடுகளை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. இலங்கை தேயிலைக்கு ஒரு நிலையான பாதையை அடைவதற்கான ஒரே வழியாக உற்பத்தி திறனை அதிகரிப்பதே சிறந்தது. அவ்வாறு இல்லையென்றால் இந்த தொழிலை முற்றாக அழித்துவிடும். இந்த உண்மைகளை மிகவும் கவனமாக பரிசீலிக்க மீதமுள்ள பங்குதாரர் குழுக்களிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம்”

“அமைச்சர் மற்றும் ஜனாதிபதி எமது திட்டங்களில் உள்ள பெறுமதியை காண்பர் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. மேலும் எங்கள் தொழில்துறையின் நீடித்த தன்மையைப் பாதுகாப்பதில் அவை எவ்வளவு முக்கியமானவை என்பதை எடுத்துக்காட்டுகின்றன. இப்போது, நாங்கள் பல திட்டங்களை சமர்ப்பித்துள்ளோம், அவை அனைத்தும் தொழிற்சங்கங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன, அவை எந்தவொரு சிறந்த சாத்தியமான மாற்றுத் திட்டத்தையும் சமர்ப்பிக்;க தவறிவிட்டன. நாம் முன்வைக்கும் அனைத்து திட்டங்களையும் குறிப்பிட்டத்தக்க விதத்தில் அரசியல் ரீதியில் எதிர்ப்பதற்கு அணிவகுத்து நிற்பதை எம்மால் புரிந்து கொள்ள முடிந்துள்ளதுடன் ஆனாலும் தொழிலாளர் வருமானத்தை அதிகரிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். குறைவடைந்து வரும் நமது தொழிலாளர் சக்தியைக் கருத்தில் கொண்டு, உழைப்பை ஈர்க்கும் மற்றும் தக்கவைத்துக்கொள்வதற்கான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும், அதாவது உலகளாவிய சிறந்த நடைமுறைகள் காலத்திற்கேற்ற வகையில் அவர்களுக்கு ஊதியம் வழங்கும் நடைமுறையை புதுப்பித்தலாகும். எவ்வாறாயினும், எங்கள் இறுதி தீர்மானத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தவறினால், அது கூட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வழிவகுக்கும், அதனுள் உள்ள அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பூஜ்யமாகவும், வெற்றிடமாகவும் மாற்றும். அதன்பிறகு நாம் சம்பள சபைக்கு மட்டுமே செல்ல முடியும். இது நாங்கள் எடுக்க விரும்பும் ஒரு நடவடிக்கை அல்ல, ஏனெனில் இது தொழிலாளர்களுக்கு சிறந்த ஒப்பந்தத்தை வழங்காது. ஆனால் ஒரு கூட்டு ஒப்பந்தம் இல்லாமல், இதுவே ஒரே வழி”என்று அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles