நாட்டிலுள்ள 28 ஆயிரத்து 541 சிறைக்கைதிகளுள் 11 ஆயிரத்து 500 பேருக்கு இதுவரை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று நீதி அமைச்சர் அலிசப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 2020 நவம்பர் 29 ஆம்திகதிவரை இந்நாட்டில் 28 ஆயிரத்து 541 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 7 ஆயிரத்து 818 பேர் தண்டனை அனுபவிக்கும் கைதிகளாவர்.
நவம்பர் 29 ஆம் திகதியன்று மஹர சிறைச்சாலையில் 2 ஆயிரத்து 891 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 731 பேர் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் .மஹர சிறைச்சாலை சம்பவத்தில் இதுவரை 11 கைதிகள் உயிரிழந்துள்ளனர். 106 பேர் காயமடைந்துள்ளனர். இரு சிறைச்சாலை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.
இதுவரை 11 ஆயிரத்து 500 கைதிகளுக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. என்டிபொடி பரிசோதனையும் இடம்பெறுகின்றது.
அதேவேளை, சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி பரிந்துரைகளை முன்வைப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துக்கான காரணம் என்ன, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் எவை என்பன தொடர்பில் அந்த குழு பரிந்துரைகளை முன்வைக்கும். ‘- என்றார்.