12 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த பெண்ணொருவர், ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகளை இன்று பிரசவித்துள்ளார்.
ராகம பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொழும்பு காசல் வீதி வைத்தியசாலையில் இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
ஆறு குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை இயக்குநர் தெரிவித்தார்.
இலங்கையில் கடைசியாக 2021ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் திகதி ஆறு குழந்தைகள் பிறந்தன.அன்று மூன்று ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தன. எனினும், இவருக்கு 6 குழந்தைகளும் ஆணாக பிறந்துள்ளது.
” 12 வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்தோம், நாட்டு வைத்தியம் மற்றும் ஆங்கில வைத்தியமும் பெற்றுவந்தோம். குழந்தைகள் பிறந்தது மகிழ்ச்சியளிக்கின்றது . நான் வாடகை வீட்டில்தான் வசிக்கின்றேன். ” – என்று குழந்தைகளின் தந்தை தெரிவித்துள்ளார்.
