நாட்டில் நேற்று 10 ஆயிரத்து 655 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், இதுவரையில் 5 லட்சத்து 46 ஆயிரத்து 803 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 33 தனிமைப்படுத்தல் மையங்களில் 2 ஆயிரத்து 601 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரையில் 63 ஆயிரத்து 439 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துகொண்டு வெளியேறியுள்ளனர்.
அதேவேளை, இரண்டாவது அலைமூலம் இதுவரை 8 ஆயிரத்து 713 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
நேற்று மாத்திரம் 443 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 187 ஆக அதிகரித்துள்ளது. 5 ஆயிரத்து 858 பேர் குணமடைந்துள்ளனர். 24 பேர் பலியாகியுள்ளனர். 6ஆயிரத்து 305 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.