13 இற்கு முடிவுகட்ட விமல், கம்மன்பில, வீரசேகர ஓரணியில்

“ இலங்கைக்குச் சாபக்கேடான 13 ஆவது திருத்தச் சட்டத்தை 22 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக இல்லாதொழிக்கவேண்டும். அதற்கான நடவடிக்கைக்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம்.”

– இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, சரத் வீரசேகர, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியாவில் குரல்கள் வலுத்துவரும் நிலையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை வைத்துக்கொண்டு இலங்கையை அடக்கி ஆள இந்தியா முனைகின்றது. அதேவேளை, வடக்கு – கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களும் இந்தத் திருத்தச் சட்டத்தின் ஊடாக தனிநாடு கோருகின்றார்கள். காணி, பொலிஸ் அதிகாரங்கள் இன்னமும் பகிரப்படவில்லை என்று கூறி அதியுச்ச அதிகாரப் பகிர்வை அவர்கள் வலியுறுத்துகின்றார்கள்.

இலங்கை பௌத்த – சிங்கள நாடு. மகாசங்கத்தினர் 13 ஆவது திருத்தத்துக்கு அடியோடு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் 13 ஆவது திருத்தச் சட்டம் எதற்கு? இந்தியாவின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் அதை முழுமையாக நீக்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியது போல் 13 ஆவது திருத்தம் வேண்டாம் எனில் நாடாளுமன்றத்தில் 22 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து அதை இல்லாதொழிக்க வேண்டும். இதற்கு எமது முழுமையான ஆதரவை வழங்குவோம்.

ஆளும் கட்சியிலும், எதிரணி வரிசைகளில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை விரும்பவில்லை. எனவே, இலங்கைக்குச் சாபக்கேடான 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க கட்சி, பேதமின்றி அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்” – என்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles