அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் என்பது வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு மட்டும் அல்ல, அது இலங்கை மக்களுக்குரியதாகும் – என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கண்டியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்படும் என வடக்குக்கு சென்றிருந்த எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார். மக்கள் மத்தியில் 13 தொடர்பில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
13 என்பது வடக்கு, கிழக்கு மாகாணத்துக்கு மட்டும் அல்ல, அனைத்து மாகாணங்களுக்கும் உரியது.
13 தொடர்பில் கடந்த ஜுலை மாதம் ஜனாதிபதி அறிக்கையொன்றை தயாரிக்க கலந்துரையாடலை நடத்தினார். ஆனால் இக்கலந்துரையாடலில் எதிர்க்கட்சி தலைவர் பங்கேற்கவில்லை. எனவே, எதிர்க்கட்சி தலைவரின் கூற்றில் உள்ள உண்மை தன்மை குறித்து சந்தேகம் எழுகின்றது” – எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.