1300 அத்தியாவசிய மருந்துகள் இருந்த போதிலும், அவற்றில் 140-150 மருந்துகளுக்கு தட்டுப்பாடு

இலங்கையில் அதிகரித்து வரும் மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு கிடைக்காமையால், பல வைத்தியசாலைகளில் மருத்துவப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் மருத்துவக் களஞ்சியங்களிலும் மாகாணப் பகுதிகளிலும் மட்டுப்படுத்தப்பட்ட மருந்துப் பொருட்கள் மட்டுமே இருப்பதாக சங்கம் வெளிப்படுத்தியுள்ளது.

சுகாதார தொழிற்சங்கங்கள் மற்றும் மருத்துவ சங்கங்கள் அண்மைக்காலமாக அரச வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தன.

1300 அத்தியாவசிய மருந்துகள் இருந்த போதிலும், அவற்றில் 140-150 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின், இதய நோயாளிகளுக்கு ஆஸ்பிரின், மெட்ஃபோர்மின், குழந்தைகளுக்கான சிரப், மயக்க மருந்து மற்றும் புற்றுநோய் மற்றும் சிறுநீரக மருந்துகளுக்கு தற்போது பற்றாக்குறை இருப்பதாக GMOA மேலும் கூறுகிறது.

“ஜனவரி இறுதிக்குள் பல அத்தியாவசிய மருந்துகளின் கையிருப்பு முடிந்துவிட்டது. முடிக்கப்பட்ட மருந்துகளை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பல மருத்துவமனைகள் சிரிஞ்ச்கள், வடிகுழாய்கள், கேனுலாக்கள் போன்ற மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறையால் பல அறுவை சிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பற்றாக்குறையை தீர்க்க அரசாங்கம் பணம் ஒதுக்கியதாக கூறினாலும், அது இன்னும் நிவர்த்தி செய்யப்படவில்லை, ”என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, தற்போது ஒத்திவைக்கப்படக்கூடிய சத்திரசிகிச்சைகளை தற்காலிகமாக ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று (12) அறிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles