14 பேர் உயிரிழப்பு: 19 பேருக்கு காயம்: 2,200 வீடுகளுக்கு சேதம்!

நாட்டில் 24 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 71 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 41 ஆயிரத்து 377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் மற்றும் மண்சரிவால் 14 பேர் பலியாகியுள்ளனர். 19 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் காணாமல்போயுள்ளார்.

99 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 82 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆயிரத்து 54 குடும்பங்களைச் சேர்ந்த 37 ஆயிரத்து 863 பேர் இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் 43 ஆயிரத்து 631 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles