15,500 கிலோ கஞ்சா போதைப்பொருள் மீட்பு!

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் இதுவரையில் 40 லட்சத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (11) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அத்துடன், இக்காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் அளவையும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டார்.

இதற்கமைய 2025 ஜனவரி முதல் இதுவரையில் ஆயிரத்து 493 கிலோ ஹேரோயின் போதைப்பொருளும், 15 ஆயிரத்து 500 கிலோ கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், 32 கிலோ கொக்கைன் போதைப்பொருள், 604 ஹஸீஸ் போதைப்பொருள், 2 ஆயிரத்து 554 ஐஸ் போதைப்பொருள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேவேளை, தேசிய போதை ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பமான பின்னர் கடந்த இரு வாரங்களில் 13 ஆயிரத்து 490 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles