யாழில் ஆலயத் திருவிழாவில் அதிகளவு ஒளி: கண் பாதிப்பால் 157 பேர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற திருவிழாவில் ஏற்பட்ட அதிகளவு ஒளி காரணமாகக் கண் பாதிப்புக்குள்ளானவர்கள் பலர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சையும் விசேட கண்காணிப்பும் வழங்கப்பட்டு வருகின்றன என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

கண் பாதிப்புக்குள்ளானவர்களில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் இரு மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளைப் பெற்று வீடு திரும்பியுள்ளமையுடன், அவர்கள் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் இருக்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனியான விடுதியொன்று ஒதுக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது ஆண்கள் 58 பேரும், பெண்கள் 44 பேரும், சிறுவர்கள் 55 பேரும் என மொத்தம் 157 பேர் கண் பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கண் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படும் அனைவரும் தாமதமின்றி உடனடியாக வைத்தியசாலைக்கு வருமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், சுகாதார சேவைகள் பணிமனை, பொலிஸார், பிரதேச செயலாளர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் இணைந்து நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆலய உற்சவத்தின் போது அதிகளவில் வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டதுடன், இசை நிகழ்வின்போதும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டதாக  குறிப்பிடப்படுகின்றது.

………..

கண் பாதிப்பு ஏற்பட்டால்
தாமதிக்காமல் வாருங்கள்

– மருத்துவர்  மலரவன் அறிவுறுத்து

யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது இடம்பெற்ற அதிகளவிலான வாணவேடிக்கை மற்றும் லேசர் ஒளிக்கீற்றுப் பயன்பாடு காரணமாக பலர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளை நாடி வருகின்றனர். இதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் டாக்டர் எம். மலரவன் பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.

கண்களில் எரிச்சல், சிவத்தல், நீர்வருதல், வலி, பார்வை மங்குதல் அல்லது ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அலட்சியம் செய்ய வேண்டாம்.

உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

தேவையானவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவை நாடுங்கள்.

குறிப்பாக நேற்றைய திருவிழாவில் கலந்துகொண்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களது கண்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனமாக அவதானிக்க வேண்டும்.

கண்களைத் தேய்க்க வேண்டாம்.

சுயமாக எந்தவொரு கண் மருந்தையும் பயன்படுத்த வேண்டாம்.

சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுங்கள்.

“கண் பாதிப்பு ஏற்பட்டால் தாமதிக்காமல் வைத்தியசாலையை நாடுங்கள்” என்றும்  கண் வைத்திய நிபுணர் டாக்டர் எம். மலரவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles