நுவரெலியா மாவட்டத்தில் வீதியோரங்களில் ஆபத்தான மரங்கள்

நுவரெலியா மாவட்டத்தில் டிட்வா புயல் மற்றும் அண்மைய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு, கற்கள் புரள்வு மற்றும் மரங்கள் முறிந்து வீழ்தல் போன்ற பாதிப்புகளின் தாக்கம் இன்னும் தொடர்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்தின் பல பகுதிகளில் பிரதான வீதிகளில் போக்குவரத்து தடைப்பட்டதுடன், மக்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.

மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக பல்வேறு உடைமைகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டதுடன், சில சந்தர்ப்பங்களில் பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

எனினும், அனர்த்தங்கள் ஏற்பட்ட பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சீரற்ற காலநிலையின் பின்னர் நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதான வீதியோரங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், மண் அரிப்பினால் வேர்கள் வெளிப்பட்ட நிலையில் பல மரங்கள் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.

குறிப்பாக, வீதிகளுக்கு அருகாமையில் சாய்ந்த நிலையில் காணப்படும் இம்மரங்கள் சிறிய காற்று அல்லது மழை ஏற்பட்டாலும் முறிந்து வீதியில் விழக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் எதிர்காலத்தில் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உரிய முறையில் அடையாளம் கண்டு, அவற்றுக்கு கேபிள்கள் பொருத்துவது அல்லது ஏனைய பாதுகாப்பு முறைகளை கையாள்வதன் மூலம் மரங்கள் சரிந்து விழுவதைத் தடுக்க முடியும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதன் மூலம் உயிர் மற்றும் உடைமை சேதங்களை குறைப்பதுடன், மரங்களையும் பாதுகாக்க முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும், இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இதுவரை போதியளவு முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
கொத்மலை, பூண்டுலோயா வீதி, தலவாக்கலை, பூண்டுலோயா வீதி, இறம்பொடை, நுவரெலியா வீதி என மாவட்டத்திலுள்ள பல பகுதிகளிலும் இந்நிலைமை காணப்படுகின்றது.

எனவே, எதிர்வரும் காலங்களில் மீண்டும் சீரற்ற காலநிலை ஏற்படுவதற்கு முன்னர், நுவரெலியா மாவட்டத்தின் பிரதான வீதியோரங்களில் ஆபத்தான நிலையில் காணப்படும் மரங்கள் மற்றும் மண்சரிவு அபாயப் பகுதிகளை அடையாளம் கண்டு, உடனடியாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மலைவாஞ்ஞன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles