வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு மலையகத்தின் பல்வேறு இந்து ஆலயங்களில் விசேட சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றாகக் கருதப்படும் அஸட லக்சுமியின் வடிவமான மகாலக்சுமியின் அருள் பெற்று 16 வகையான செல்வங்கள் குடும்ப நலம் மற்றும் நீண்ட ஆயுலுடன் கூடிய கணவனை பெறவும் சுமங்கலி பெண்களால் வரலக்ஷ்மி விரதம் கொண்டாடப்படுகிறது.
இந்த நிகழ்வினை முன்னிட்டு, சகல செல்வங்களும், சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டி பக்தர்கள் சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
நுவரெலியா மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்திலும் வரலக்ஷ்மி விரதத்தை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இதன்போது திருவிளக்கு பூஜை, மகாலக்ஷ்மி அலங்கார அபிஷேக பூஜை மற்றும் வசந்த மண்டப பூஜை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன.
இந்த பூஜை வழிபாடுகளில் ஹட்டன் மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த பெருமளவான பக்த அடியார்கள் கலந்து கொண்டு, பக்தி பூர்வமாக வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
பூஜை வழிபாடுகளை ஆலயத்தின் பிரதம குரு பாலசுப்பிரமணியம் சர்மா உள்ளிட்ட பல குருமார்கள் இணைந்து நடத்தினர்.
வரலக்ஷ்மி விரதத்தை அனுஷ்டிப்பதன் முக்கியத்துவம் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் நற்பலன்கள் தொடர்பாகவும் பக்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு திருநீறு மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
வரலக்ஷ்மி விரதத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த விசேட பூஜை வழிபாடுகள் மலையகத்தின் பல ஆலயங்களிலும் பக்தி பூர்வமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்










