16 வயதுக்குட்பட்ட சிறார்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் புதிய சட்டத்தை லேபர் அரசு நேற்று நிறைவேற்றியுள்ளது.
உலகத்திலேயே முதல் முறையாகவே இவ்வாறானதொரு சட்டமூலம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
சிறுவர்கள் லாக் இன் செய்வதை தடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கு 32 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் சோதனை முறையில் வரும் ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட உள்ளது. இது முழுமையாக நடைமுறைக்கு வர ஒரு வருடம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
பிரான்ஸ், அமெரிக்காவின் சில மாகாணங்களில் பெற்றோரின் அனுமதியின்றி சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் சட்டங்கள் இயற்றபட்டுள்ளன. ஆனால் உலகிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலிய அரசு இதனை முழுமையாக தடை செய்யும் சடடத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
குறித்த ஏற்பாட்டுக்கு சிறார்கள் உரிமை தொடர்பான சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் 77 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன.
லேபர் அரசின் இந்த நடவடிக்கை தொடர்பில் மெட்டா நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.