தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு,
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை இம்முறை அதிகரித்துள்ளது. கடந்த வருடம் 77.75 சதவீத மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்த நிலையில் இம்முறை 77.96 வீதமான மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
37.70 வீதமான மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். கடந்த வருடம் 45.06 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
16.05 வீதமான மாணவர்கள் வெட்டு புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சித்தி வீதம் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் 15.22 சதவீதமான மாணவர்கள் வெட்டுபுள்ளிக்கு மேல் பெற்றிருந்தனர்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் கடந்த காலங்களில் புள்ளிகளைக்கூட மாணவர்கள் பெற்றிருந்தனர். இம்முறை அதிகூடிய புள்ளியாக 188 பெறப்பட்டுள்ளது.