16 ஆம் திகதி விவசாயிகளை அணிதிரட்டுவோம்! முடிந்தால் கழுத்தை பிடிக்கவும்!!

அரசுக்கு எதிராக எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இந்த அரசால் விவசாயிகள் உட்பட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்வதற்கு வழியில்லை. இந்நிலையில் விவசாயிகளின் கழுத்தை பிடித்துகூட சேதன பசளையை பயன்படுத்தி எனக்கு விவசாயம் செய்விக்க முடியும் என ஜனாதிபதி மிரட்டுகிறார். 16 ஆம் திகதி விவசாயிகள் வருவார்கள். முடியுமானால் கழுத்தை பிடித்து காட்டுங்கள்.

இந்த அரசு எல்லா வழிகளிலும் பெயில். நாட்டு மக்கள் இதனை உணர்ந்துள்ளனர். எனவே, 16 ஆம் திகதி நடைபெறும் போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.”- என்றார்.

Related Articles

Latest Articles