நாட்டில் 162 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அபாய வலயங்களாகப் பெயரிடப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 20 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 77,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்குவால் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்துக்குள் 3 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இம்மாதத்தில் கடந்துள்ள 20 நாட்களில் 21,650 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

