18-19 வயது பிரிவு மாணவர்களுக்கு 21 ஆம் திகதி முதல் தடுப்பூசி!

18, 19 வயது பிரிவு பாடசாலை மாணவர்களுக்கு  தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நடவடிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

அவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளிலேயே தடுப்பூசி வழங்கப்படும். வைத்தியர்களின் கண்காணிப்பின்கீழ் தடுப்பூசி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

பாடசாலைக்கு செல்லாத 18 தொடக்கம் 19 வயதுக்கிடைப்பட்டவர்கள் தாம் வசிக்கும் பகுதியிலுள்ள பிரதேச வைத்திய அதிகாரி அலுவலகங்களில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

மேற்படி வயது பிரிவினருக்கு பைசர் தடுப்பூசியே வழங்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles