1,816 பேரின் உயிரை பறித்த ‘கொரோனா’ 3ஆவது அலை!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நேற்றுவரை நாட்டில் ஆயிரத்து 816 பேர் பலியாகியுள்ளனர் – என்று கொரோனா பரவல் தடுப்பு செயற்பாட்டு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

முதலாவது அலையின் 13 மரணங்களும், 2ஆவது அலையில் 596 மரணங்களும் பதிவாகின.

இதன்படி கொரோனா மூன்று அலைகளிலும் பலியானவர்களில் மொத்த எண்ணிக்கை நேற்று முன்தினம்வரை 2 ஆயிரத்து 425 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles