அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தை ஒழித்துக்கட்டி, 13 இலுள்ள விஷப் பற்களை பிடுங்குவதற்கு மக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை எமக்கு வழங்கவேண்டும் என்று பிவிதுரு ஹெலஉறுமய கட்சியின் தலைவரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான உதயகம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 2015 ஆம் ஆண்டு எமது நாட்டில் உருவான அரசாங்கத்துக்கு உலகில் பலம்பொருந்திய நாடுகளின் ஆதரவு இருந்தது. நாடாளுமன்றத்திலுள்ள கட்சிகளும் நேசக்கரம் நீட்டின. எனவே, அத்தகையதொரு அரசாங்கத்தை எதிர்ப்பது, கருங்கல்லில் தலையை முட்டும் செயலுக்கு ஒப்பானதாகும் என சிலர் கருத்து வெளியிட்டனர். ஆனால், நாம் எதிர்த்து நின்றோம். கருங்கல்லை சிதறடிக்கவைத்து, ஆட்சிக்கு முடிவுகட்டினோம்.
நாட்டுக்காக அரசாங்கத்துக்குள் இருந்தபடி எமது போராட்டம் தொடரும். தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறமுடியாமல்போ
அதேபோல் அடிப்படைவாதத்தை ஒழிப்பதற்கும், பொதுவானதொரு சட்டத்தை கொண்டுவருவதற்கும், நாட்டு வளங்களை பாதுகாப்பதற்கும் அன்று எதிரணியில் இருந்து முன்னெடுத்த போராட்டத்தை அரசாங்கத்துக்குள் இருந்தும் செய்வோம் என மக்கள் நம்புகின்றனர். நிச்சயம் அதனை செய்வோம் என்ற உத்தரவாதத்தை மக்களுக்கு வழங்குகின்றோம்.
19 ஆவது திருத்தச்சட்டத்தை மைத்திரிபால சிறிசேனகூட விமர்சிக்கின்றார். அது நீக்கப்படவேண்டும். 13 இல் உள்ள விஷப்பற்களை பிடிங்கியெறியப்படவேண்டும். எனவே, புதியதொரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம். அதனை மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.” – என்றார்.