’19’ இல் கைவைக்க வேண்டாம் – சம்பந்தன் வலியுறுத்து!

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலை மையிலான புதிய அரசு கைவைக்க வேண்டிய அவசியமில்லை. புதிய அரசமைப்பே தேவைப்படுகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

19 ஆவது திருத்தத்தால்தான் கடந்த ஆட்சியில் நாடு ஜனநாயக வழியில் பயணித்தது. இடையில் நடந்த சதிப் புரட்சியால் 52 நாள்கள் தளம்பல் ஏற்பட்டது. எனினும், உயர்நீதிமன்றம் அந்தத் தளம்பல் நிலைக்கு முடிவு கட்டியது.

புதிய அரசும் ஜனநாயக வழியில் பயணிக்க வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். 19ஆவது திருத்தத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதை நாம் விரும்பவில்லை.

அரசியல் தீர்வுக்கும் அபிவிருத்திக்கும் வழிவகுக்கும் புதிய அரசமைப்பையே நாம் விரும்புகின்றோம். அதை இந்த அரசு உடன் கொண்டுவர வேண் டும் – என்றார்.

Related Articles

Latest Articles