1954 இல் நுவரெலியா பீட்ரு தோட்டத்துக்கு சென்ற இளவரசர் பிலிப்…..

இரண்டாம் எலிசபெத் மகா ராணியுடன், அவரின் கணவரான இளவரசர் பிலிப்பினால் 1954 ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். இவ்விஜயத்தின்போது அவர்கள் நுவரெலியாவுக்கும் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

நுவரெலியாவில், பீட்ரு தோட்டத்திலுள்ள துரையின் பங்களாவுக்கு சென்ற அவர்கள், தோட்டத் தொழிலாளர்களையும் சந்தித்தனர். மகாராணி மற்றும் இளவரசரின் வருகையின் நினைவாக தேயிலைச் செடியொன்றும் நடப்பட்டது. அந்த தேயிலைச்செடி இன்றளவிலும் பராமரிக்கப்படுகின்றது.

குறித்த செடியில் பறிக்கப்பட்ட கொழுந்து பல லட்சம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

2013 இல் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கொழும்பு வருகைதந்திருந்த  இளவரசர் பிலிப்பின் மகனான இளவரசர் சார்ள் குறித்த தோட்டத்துக்கு சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles