2ஆவது அலைமூலம் 10,451 பேருக்கு கொரோனா! 22 பேர் பலி!!

இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (9) 10 ஆயிரத்து 451 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 22 பேர் பலியாகியுள்ளனர்.

மினுவாங்கொட கொத்தணிமூலம் ஆயிரத்து 41 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் ஆயிரத்து 7 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. ஏனைய 8 ஆயிரத்து 403 பேரும் இவர்களுடன் தொடர்பை பேணியவர்களாவர்.

இவ்வாறு 2ஆவது அலைமூலம் கொரோனா தொற்றியவர்களில் நேற்றுவரை 4 ஆயிரத்து 449 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் நேற்று 10 ஆயிரத்து 632 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரையில் 6 லட்சத்து 2 ஆயிரத்து 850 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை, இலங்கையில் நேற்றுவரை மொத்தமாக 13 ஆயிரத்து 929 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 8ஆயிரத்து 285 பேர் குணமடைந்துள்ளனர். 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles