இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (20) 15 ஆயிரத்து 761 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 61 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)
மினுவாங்கொட கொத்தணிமூலம் 3 ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 12 ஆயிரத்து 702 வைரஸ் தொற்றியுள்ளது.
இவ்வாறு 2ஆவது அலைமூலம் கொரோனா தொற்றியவர்களில் நேற்றுவரை 9 ஆயிரத்து 905 பேர் குணமடைந்துள்ளனர்.
அதேவேளை, இலங்கையில் நேற்றுவரை மொத்தமாக 19 ஆயிரத்து 279 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 270 பேர் குணமடைந்துள்ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்றும் ஒருவர் உயிரிழந்தார்.
இதன்படி இலங்கையில் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74ஆக அதிகரித்துள்ளது.