இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (26) 17ஆயிரத்து 938 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 83 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)
மினுவாங்கொட கொத்தணிமூலம் 3 ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 14 ஆயிரத்து 373க்கு மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கில் 15 ஆயிரம் பேர்வரை குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 502 பேருக்கு வைரஸ் தொற்றியது.
அதேவேளை, இலங்கையில் நேற்றுவரை மொத்தமாக 21 ஆயிரத்து 469 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 15 ஆயிரத்து 447 பேர் குணமடைந்துள்ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்றும் இருவர் உயிரிழந்தார்.
இதன்படி இலங்கையில் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது.