2 ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் 26 வயது இளைஞன் கைது!

சட்டத்தினால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் உடைமையில் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் வைத்து 26 வயதுடைய ஒருவரே நேற்று கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிறேமதிலக தலைமையிலான குழுவினர் இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

Related Articles

Latest Articles