’20’ இற்கு அமைச்சரவை ஒப்புதல்! அடுத்து என்ன?

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை நடைபெற்றது. இதன்போதே நீதி அமைச்சரால் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு, அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டுள்ளது.
19ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே 20 ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது என ஆளுங்கட்சி அறிவித்துள்ளது.
எனவே, விரைவில் மேற்படி சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனை நிறைவேற்றுவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு போதும் எனவும், சர்வஜன வாக்கெடுப்பு நடத்த தேவையில்லை எனவும் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ஒருவர் இரண்டுமுறை பதவி வகித்தல், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஐந்தாண்டுகளுக்கு மட்டுப்படுத்தல் உள்ளிட்ட காரணிகளை தவிர 19 இல் உள்ள ஏனைய அனைத்துக் காரணிகளையும் நீக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles