20 கிலோ கொழுந்து பறித்தால்தான் 1000 ரூபா – தொழிலாளர்களுக்கு நெருக்கடி! சங்கங்கள் மௌனம்!!

நாளொன்றுக்கு 20 கிலோ கொழுந்து பறித்தால்தான் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படம் என தோட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ள நிலையில், அதற்கு எதிராக தொழிலாளர்கள் போராடிவருகின்றனர்.

எவ்வித தொழில் சுமையும் அதிகரிக்கபடாமல்தான் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்தது. ஆனாலும் தற்போது நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றன.

இதற்கு எதிராக பொகவந்தலாவை மற்றும் மஸ்கெலியா பகுதியில் நேற்று போராட்டம் நடைபெறுகின்றது. மேலும் சில பகுதிகளில் இன்று நடைபெறவுள்ளது. நேற்றைய போராட்டங்கள் தொடர்பான காணொளி

Related Articles

Latest Articles