’20’ குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சபையில் அறிவிப்பு

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பாராளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போதே உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானத்தை சபைக்கு சமர்ப்பித்து, அது தொடர்பில் சபாநாயகர் சபைக்கு தெரியப்படுத்தினார்.

” 20 ஆவது திருத்தச்சட்டமூலம் அரசியல் யாப்பின் 82 – 1 யாப்பிற்கு அமைவானதாகவும், அரசியல் யாப்பின் 82 – 5 யாப்பிற்கு அமைய, விசேடமாக பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட வேண்டும். திருத்த சட்ட மூலத்தின் 3, 5, 14 மற்றும் 22 சரத்துக்கமைவாக அரசியல் யாப்பின் 4 ஆவது யாப்புடன் 3 ஆவது யாப்பிற்கு அமைவானது, அரசியல் யாப்பின் 83 ஆவது யாப்பிற்கு அமைவாக, சர்வஜன வாக்கெடுப்பின் போது பொது மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும், இருந்த போதிலும் 3 மற்றும் 14 சரத்துக்களில் உள்ள முரண்பாடுகள் உத்தேச பாராளுமன்ற தெரிவுக்குழு திருத்தத்திற்கு அமைவாக திருத்தம் மேற்கொள்வது நீக்கப்பட வேண்டும்.

5 ஆவது சரத்தில் உள்ள முரண்பாடு உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள வகையில் பொருத்தமான திருத்தத்தை மேற்கொள்வதன் மூலம் விலக்கிக்கொள்வதற்கு முடியும் .” – என்று உயர்நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles