நோர்வூட் – மஸ்கெலியா பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் 200 லீற்றர் ‘தார் பெரலை’ களவாடிச்சென்ற இருவர் நோர்வூட் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். தாரை ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று (23) அதிகாலை பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து குறித்த லொறியை சோதனைக்குட்படுத்தும்போதே தாரை களவாடிச் செல்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் சாரதியும், உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். கைதானவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
பொகவந்தலாவ நிருபர் – எஸ். சதீஸ்
