” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.”
இவ்வாறு மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் லஹிரு வீரசேகர தெரிவித்தார்.
” 200 வருடங்களாக பெருந்தோட்ட மக்கள் அடக்கி ஆளப்பட்டுவருகின்றனர். கடந்த காலங்களில் இருந்த அரசியல் கட்சிகள் அவர்களுக்கு என்ன செய்தன?
தேர்தல் காலத்தில் சம்பளம் உட்பட அம்மக்களின் பிரச்சினைகளை தேசிய மக்கள் சக்தியும் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியது. ஆனால் இன்னும் தீர்வு முன்வைக்கப்படவில்லை.” எனவும் லஹிரு வீரசேகர குறிப்பிட்டார்.
அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிகாலத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தற்போதைய ஆட்சியிலும் முன்னெடுக்கப்படுகின்றமை கவலையளிக்கின்றது. இதுதான் அவர்கள் கூறிய மாற்றமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
		 
                                    









