2000 ரூபா வழங்குவதில் குளறுபடி! இ.தொ.கா. உயர்மட்டத்துக்கு அறிவிப்பு!!

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 17 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. மேற்படி17 கிராம சேவகர் பிரிவுகளிலும், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2000 கொடுப்பனவுகள் வழங்குவதில் தற்போது சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது என நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே. ரவி தெரிவித்தார்.

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பல கிராம சேவகர்கள் பிரிவுகளில் நேற்று 2000 ரூபா கொடுப்பனவு வழங்கலில் ஏற்பட்ட சிக்கல் நிலைமை தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் 1500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன . ஒரு சில கிராம சேவகர் பிரிவுகளில் 3000 தொடக்கம் 4000 குடும்பங்கள் வாழ்கின்றன. இதில் 500 தொடக்கம் 600 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு 200 தொடக்கம் 250 பேருக்கு மாத்திரம் தான் அனுமதி கிடைத்துள்ளன, ஆகவே பலர் கிராம சேவகர்களிடம் முரண்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இது குறித்து ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன். மாவட்ட பிரதேச செயலாளர்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். இது குறித்து உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து நிவர்த்தி செய்வதற்காக அவர்கள் தெரிவித்துள்ளனர்.” – என்றார்.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles