2000 கிலோ இரும்பைக் களவாடிய இருவர் கைது!

2 ஆயிரம் கிலோ இரும்பை திருடிய குற்றச்சாட்டில் 2 பேர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலையிலிருந்து பகுதி பகுதியாக வெட்டி எடுக்கப்பட்ட இரும்பு, நல்லிணக்கபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு வாகனம் ஒன்றில் இரகசியமாக ஏற்றப்படுவதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அதற்கு அமைவாக அங்கு சென்ற பொலிஸார் 2 ஆயிரம் கிலோ இரும்பை மீட்டதுடன் சந்தேகத்தில் 30 மற்றும் 40 வயதுடைய இருவரைக் கைது செய்துள்ளனர்.

Related Articles

Latest Articles