2005 இல் எடுத்த தவறான முடிவை தமிழர்கள் இம்முறை சரிசெய்வார்கள்!

“ 2005 ஆம் ஆண்டு இழைத்த தவறை வடக்கு, கிழக்கு மக்கள் மீண்டும் இழைக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அன்று ஜனாதிபதி தேர்தலை அம்மக்கள் புறக்கணித்தால்தான் ரணில் தோற்றார்.” – என்று முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“1950 களில்பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு வெளியேறினார், ஆனால் கட்சி பலவீனமடையவில்லை . 1991 இல் லலித் மற்றும் காமினி திஸாநாயக்க ஆகியோர் ஐ.தே.கவைவிட்டு வெளியேறி புதிய கட்சியை ஸ்தாபித்தனர். அப்போதும் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவை சந்திக்கவில்லை.எனினும், சஜித் பிரேமதாச தலைமையில் நாம் வெளியேறிய பின்னரே கட்சி பிளவை சந்தித்தது. அவ்வாறானதொரு முடிவை எடுத்திருக்ககூடாது என தற்போது தோன்றுகின்றது .பிரதான கட்சியை உடைத்துவிட்டோமே என்ற மனக்கவலை இன்னும் உள்ளது.

1994 ஜனாதிபதி தேர்தலின்போது காமினி திஸாநாயக்க படுகொலை செய்யப்பட்டார். அதனால் கட்சி தோற்றது. பின்னர் 1999 ஜனாதிபதி தேர்தலில் கடைசி பிரசாரக் கூட்டத்தின்போது சந்திரிக்கா குண்டு தாக்குதலுக்கு இலக்காகி கண்ணை இழந்தார். இறுதியில் அனுதாப வாக்குகளால் வெற்றிபெற்றார்.

2005 இல் ராஜபக்ச குழுவின் சூழ்ச்சிக்குள் சிக்கி அப்பாவி வடக்கு, கிழக்கு மக்களின் வாக்குகளை புறக்கணிக்க செய்தனர். இதனால் ரணில் தோற்றார். வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களித்திருந்தால் ரணில் நிச்சயம் ஜனாதிபதி ஆகி இருப்பார். எனவே, ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்ட இரு தடவைகளிலும் அவர் இயல்பாகவே தோல்வியை சந்திக்கவில்லை. அதற்கான சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

எனினும், 2005 இற்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மக்கள் தமது வாக்குகளை எமது முகாமுக்கே வழங்கிவருகின்றனர். எனினும், தற்போது சஜித்தும், ரணிலும் பிரிந்து நிற்பதால் எவருக்கு வாக்களிப்பது என்ற பிரச்சினை உருவாகியுள்ளது. இதன் உண்மைதன்மை செப்டம்பர் 22 ஆம் திகதியே தெரியவரும்.”- என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles