2017 இற்கு பிறகு நாடு முழுதும் மின் துண்டிப்பு! நாசகார செயலா? விசாரணை ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் இன்று பகல் 12.45 மணி முதல் மாலை 6 மணிவரை மின் விநியோகம் தடைபட்டது. தற்போது வழமைக்கு திரும்பியிருந்தாலும் சில பகுதிகளில் மின்விநியோகம் தொடர்ந்தும் தடைபட்டுள்ளது.

கெரவலபிட்டிய உப மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், இது தொடர்பில் விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு துறைசார் அமைச்சர் டளஸ் அழகப்பெரும பணிப்புரை விடுத்துள்ளார். இதன்பிரகாரம் விசாரணை குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் நாசகார செயல் எதுவும் இருக்காது எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இறுதியாக 2017 ஆம் ஆண்டிலேயே நாடு தழுவிய ரீதியில் மின்தடை ஏற்பட்டிருந்தது. அதற்கு முன்னர் 2009, 2015 ஆம் ஆண்டுகளிலும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Related Articles

Latest Articles